dinamalar telegram
Advertisement

அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முன் சேறும், சகதியுமாக உள்ளதால் தவிப்பு

Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன் சேறும், சகதியுமாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாராபுரம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலக வளாகத்தின் உட்பகுதியில் வேளாண்மை, பொதுப்பணி, அங்கன்வாடி அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 20 பஞ்.,களும் இரண்டு பேரூராட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. அலுவல் நிமித்தமாக பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கிராமப்புற மக்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அலுவலக வாயிலின் முன்புறம் குடிநீர் குழாய் உடைந்து தேங்கியுள்ள தண்ணீரில் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் டயர்கள் பட்டு சேறும், சகதியுமாக மாறி விட்டது. அலுவல் நிமித்தமாக வந்து செல்லும் கிராம மக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அவ்வப்போது நிலைதடுமாறி சேற்றில் விழுந்து அவஸ்தைப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் பயனில்லை. அலுவலக நுழைவு வாயில் வழித்தடம் சீரமைக்கப்பட வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement