dinamalar telegram
Advertisement

புதிய இருக்கைகள் அமைக்கப்படுமா?

Share
கரூர்: கரூர் அருகே, பயணியர் நிழற்கூடத்தில் இருக்கைகளை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் - சேலம் சாலை சர்ச் கார்னர் பகுதியில், எம்.பி., நிதியின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதில், 10 இரும்பு இருக்கைகள் அமைக்கப்பட்டன. தற்போது பெரும்பாலானவை உடைந்த நிலையில் உள்ளன. பயணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, முதியவர்கள், பெண்கள் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே, 'பயணிகள் நிழற்கூடத்தில் புதிதாக இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement