dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வை ஜெயலலிதா காப்பாற்றுவார்: சசிகலா பேட்டி

Share
சென்னை: ‛‛அ.தி.மு.க., தொண்டர்களை எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்'' என ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சசிகலா கூறினார்.

சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார்.
விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர்.அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(16ம் தேதி) சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன் இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். இருவரும் அ.தி.மு.க.,வையும் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சசிகலா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (61)

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    பாதி கரைந்து போன அதிமுகவை ...மீதியையும் கரைக்க சசிகலா நிச்சயம் வருவார்... அதுதான் பிஜேபிக்கு வசதி...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஆடீம்கா கட்சிக்கு சங்கு ஊதி, சீக்கிரமே புதைக்கப்படும்ன்னு அர்த்தம் காண்க.

  • PKN - Chennai,இந்தியா

    அஇஅதிமுக வை காப்பாற்ற தானே உங்களை ஜெயிலுக்கு அனுப்பி, உங்களிடம் மண்டியிட்டு முதல்வரானவரை வைத்து உங்களை கட்சியை விட்டு நீக்க வைத்ததும் அவருடைய ஆன்மா தானே

    • Visu Iyer - chennai,இந்தியா

      இல்லை இது (அதிமுக) "மத்தியில்" உள்ளவரின் தந்திரம்.. இன்னமும் குழந்தையாக இருக்கிறீர்களே பிகேஎன்

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    மத்தியில் ஆளும் தேசிய கட்சி தனது வியூகத்தை மாற்றுமா?

    • Visu Iyer - chennai,இந்தியா

      சசிகலாவை பாஜகவின் தமிழக மாநில தலைவராக போட வேண்டும் என்று சொல்றீங்க.. புரிகிறது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லையே

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    சசி / எடப்பாடி / பன்னீர் இவர்கள் மூன்று பேரை சேரவிட மாட்டார் பாருங்கள் , அப்போ தான் அவன் வளர முடியும்

    • Visu Iyer - chennai,இந்தியா

      தமிழகத்தில் தாமரை மலரும்(மா)

Advertisement