dinamalar telegram
Advertisement

பாக்.,கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் தலைவர் ஹிபத்துல்லா பலி?

Share
காபூல்: தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் 2016ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப்பேற்றார். அவர் எப்படியிருப்பார், எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாகிவில்லை. ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை தலிபான்கள் மறுத்தனர்.

இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றினர். இதையடுத்து, ஹிபத்துல்லா வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகிவில்லை.

இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்,'' எனக்கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • சம்பத் குமார் -

    1). இதனால் அறிவிக்கபடுவது என்னவென்றால் லிஸ்டில் ஒரு நம்பர் குளோஸ்.2). ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஒரு பழமைவாத பயங்கரவாதி தொலைந்தான். மன நிம்மதி.3). அமெரிக்காவிற்கு இரண்டு அல்லது ஜந்து மில்லியன் டாலர் மிச்சம். தேடப்பட்ட குற்றவாளி லிஸ்டில் இருந்து எடுத்துவிடுவார்கள்.4).இந்தியாவிற்கு ஒரு தீவிரவாதி தொலைந்தான்.5). பாகிஸ்தானுக்கு நிம்மதி. அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்க சந்தர்ப்பம் கிடைத்தது. 6). இப்படி ஒவ்வொருத்தருக்கும் அவர் இறந்தது ஒரு விதத்தில் ஆதாயம் தான். 7). யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். நன்றி ஐயா, ஹரி ஓம்.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    அடுத்த வெள்ளி கிழமை, பாவம் அவங்க 😪😭

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இனி பாக்கிற்கு தலைவலி திருகு வாலி அத்தனையும் ஆரம்பம். செய்த வினை பயன் அனுபவிக்க வெஆண்டியது. காசு கொடுத்து சூனியம்..

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இது கடந்தாண்டு நடந்தது அமைதியா இப்போ சொல்லுறாங்க

  • அப்புசாமி -

    மகாபாரதத்தில் நடித்த சகுனி மாதிரியே இருக்காரு... நமஸ்தே மாமா ஜி.

Advertisement