dinamalar telegram
Advertisement

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு

Share
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில், இரண்டாம் போக பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தடப்பள்ளி தலைமதகில் இருந்து, வினாடிக்கு 100 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து, 50 கன அடி நீர், இரண்டாம் போகத்துக்கு நேற்று காலை திறக்கப்பட்டது. வரும், 2022 பிப்.,11 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். மழை பெய்யும் சமயங்களில், விவசாயிகளின் தேவையறிந்து, தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அதேசமயம் கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement