பஸ் மோதி முதியவர் சாவு
நம்பியூர்: நம்பியூர் அருகே பிலியம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி, 70, கூலி தொழிலாளி; எக்சல் சூப்பர் மொபெட்டில், கோவை சாலையில், நேற்று முன்தினம் மதியம் சென்றார். பின்னால் வந்த பனியன் கம்பெனி பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். விபத்துக்கு காரணமான, பஸ் டிரைவர் ஜலீல், 40, என்பவரை பிடித்து, வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!