dinamalar telegram
Advertisement

பேப்பர் ஏஜென்ட் பலி

Share
கோபி: கோவை, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 47; நியூஸ் பேப்பர் ஏஜென்ட்; உறவினர்களுடன், சத்தியமங்கலம் அருகே மில்மேடு என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில் நேற்று மதியம், 3:00 மணிக்கு குளித்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் ஆனந்தராஜ் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement