dinamalar telegram
Advertisement

30 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

Share
கோவை: மூதாட்டி வீட்டில் இருந்து 30 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கவுரி 73. கடந்த இரு மாதங்களுக்கு முன் வரலட்சுமி விரத பூஜை நடத்தினார். இதையடுத்து தனது 30 சவரன் நகைகளை வீட்டு பீரோவில் பத்திரப்படுத்தினார்.சமீபத்தில் பீரோவை திறந்து பார்த்தபோது 30 பவுன் நகைகள் மாயமாகியிருந்தன. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கவுரி குனியமுத்துார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.போலீசார் வழக்கு பதிந்து நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement