dinamalar telegram
Advertisement

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Share
சென்னை- --'வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்' எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ள நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.

கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும்.சென்னையின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மே.மாத்துாரில் 7 செ.மீ., மழை பெய்து உள்ளது.மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும்.அரபிக் கடலில் மத்திய கிழக்கு, தென் கிழக்கு மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரளா- - லட்சத்தீவு கடலோர பகுதியை இன்று கடக்கும். அதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Veerappan Elangovan - Erode,இந்தியா

    அக்டோபர் 27 , 28 , 29 , 30 -2021 ஆகிய நாட்களில் 9 கிரகங்களும் வலுப்பெற இருப்பதால் இந்த நாட்களில் உலகில் ஏதோ ஒரு அதிசியம் நடக்கப்போகிறது இது போன்று 9 கிரகங்களும் வலுப்பெறுவது 108 வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் நடக்கும் இந்த நாட்களை கடக்கும் வரை அதாவது November 27, 2021 வரை நிலநடுக்கம் புயல் பூகம்பம் எரிமலை வெடித்தல் மற்றும் தீவிரவாதிகளால் பாதிப்பு மற்றும் ஒடுக்குதல் பேரழிவுகள் இந்த புவியில் நிகழும் அரசு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்

Advertisement