dinamalar telegram
Advertisement

சரக்கு கப்பல்களை கையாள மறுப்பு; அதானி குழுமத்தின் அறிவிப்புக்கு ஈரான் அதிருப்தி

Share
Tamil News
புதுடில்லி-ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை கையாள மாட்டோம் என்ற அதானி குழுமத்தின் அறிவிப்புக்கு, ஈரான் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதானி குழுமத்திற்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் உள்ளது. இங்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதை பொருள் கடந்த மாதம் பிடிபட்டது. மேற்காசிய நாடான ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த போதை பொருள் சிக்கியது. இது, அதானி குழுமத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் கப்பல்களில் உள்ள சரக்குகள், அடுத்த மாதம் 15 முதல் முந்த்ரா துறைமுகத்தில் கையாளப்படாது' என, அதானி குழுமம் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு, ஈரான் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து டில்லியில் உள்ள ஈரானிய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் ஆக்கிரமிப்பு, உள்நாட்டு போர், கடுமையான வறுமை உள்ளிட்ட காரணங்களால் அங்கு போதை பொருள் அதிகரித்தது. இது, ஈரானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
அவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.கடந்த 40 ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறோம். போதை பொருளுக்கு எதிராக ஈரான் தீவிரமாக போராடி வருகிறது. அதை அமெரிக்கா பாராட்டி உள்ளது. அப்படியிருக்கையில் எங்கள் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • DVRR - Kolkata,இந்தியா

  ""இங்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதை பொருள் கடந்த மாதம் பிடிபட்டது. மேற்காசிய நாடான ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த போதை பொருள் சிக்கியது. இது உள்ளே நுழஞ்சி கொஞ்சம் பார்த்தோம்னா அதிலும் ஷாருக்ககான் முதல் எல்லா கான் பசங்க கை வித்தை அதில் இருக்கும் என்று உறுதி கூற முடியும்

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  நம்ப பிச்சை அரசின் தலையா இருந்தா, இதுக்கு ஒரு கடுதாசியை ( அவருக்கு தெரிஞ்ச மொழியில் ....எவனுக்கு தெரிஞ்சா ஏன்னா தெரியலீன்னா ஏன்னா....) எழுதிட்டு அடுத்த வேலைக்கு (அதாவது அடுத்த கடுதாசி அல்லது அடுத்த ஆய்வு ) கெளம்பீடுவார்.. ஆய்வு ன்னா அப்படி ஒரு வேகம்... காலை அஞ்சு மணிக்கு கெளம்பினா ராத்திரிதான் வருவார்.. அந்த செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் இன்று உலகிலேயே அதிகமா தடுப்பூசி தயாரித்து உலகின் மக்களை காத்துவருவது எல்லாரும் அறிந்ததே..............தெரியலீனா, முரசொலி வாங்கி படிங்க ப்பு.......

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  கசகசா செடியில் தானே ஓபியம் ..அஞ்சு வேல தொழுகை ..தாடி ...தொப்பி.... கணுக்கால் வரைக்கும் வரும் தம்பியோட பைஜாமா... ...அண்ணனோட ஜிப்பா... இப்படியெல்லாம் வேஷம் போட்டு போதை பொருள் கடத்தல் அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அதானி செய்தது சிறுபிள்ளைத்தனம்.. சட்டப்படி செல்லாது... பல்டியடித்தே ஆக வேண்டும்... இதே போல அடானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மும்பை உட்பட விமான நிலையங்களில் இவர்கள் சொன்ன நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள மாட்டோம்னு சொல்வார்களா..??? இந்த நேர்ந்து விடப்பட்ட பக்கோடாஸ் தேவையில்லாம இந்த ஆயில் மற்றும் ஸ்க்ராப் திருடனுக்கு ஏன் சொம்பு தூக்கறாய்ங்கன்னு தெரியல...

 • Mano - Madurai,இந்தியா

  அதானி கொஞ்சம் தமாஷ் பேர்வழி. நான் அடிக்கிற மாதிரி டிக்கிறேன். நீ வலிக்கிற மாதிரி நடி என்கிறார்.

Advertisement