dinamalar telegram
Advertisement

அக்.,16: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

Share
சென்னை: சென்னையில் இன்று (அக்.,16), பெட்ரோல் லிட்டருக்கு 102.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 98.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 98.26 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ 102.70 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 98.59 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • vignesh - chennai,இந்தியா

    மக்கள் இதை சத்தியமா மறக்க மாட்டாங்க வரும் லோக்சபா தேர்தலில் கண்டிப்பா மக்கள் தகுந்த பாடம் புகத்துவார்கள்...

  • வினவு -

    ஜெய் ஜி

  • mohan - chennai,இந்தியா

    ஏன் இலவசத்தை விளைவை யாரும் பேசமாட்டேங்குறார்கள்...

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      குடிச்சிருகிய எனா அது விலை இல்ல இலவசம் போ

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    இந்த பகல் கொள்ளையர்களுக்கு வரலாறு காணாத தோல்வியை அடுத்த தேர்தலில் மக்கள் அளிப்பார்கள்...

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    இப்போதாவது தயைகூர்ந்து மாநில எதிர்க்கட்சிகள் மோடி கூறியதைப் போல ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோலை கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் கண்டதெல்லாம் எதிர்க்கட்சி புதல்வருக்கு லெட்டர் எழுதும் நம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதற்கும் லட்டர் எழுதுவாரா

Advertisement