dinamalar telegram
Advertisement

துாத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்டரில் பலி

Share
துாத்துக்குடி;துாத்துக்குடி அருகே, ஏழு கொலைகள் உட்பட 35 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, போலீசாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அருகே திருமலையாபுரத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன், 40.இவர் மீது துாத்துக்குடி முத்தையாபுரத்தில் கொலை, மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம், ஒத்தக்கடை, தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷன்கள், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவண்ணாமலை என எட்டு மாவட்டங்களில் ஏழு கொலைகள் உட்பட 35 வழக்குகள் உள்ளன.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், சிவகாமிபுரம் ஜெகதீஷ், 23 அக்., 5ல் காணாமல் போனார். இவர், துரைமுருகன் உள்ளிட்டோருடன் காரில் சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.நண்பராக பழகிய துரைமுருகன் தரப்பினர், ஜெகதீஷை கடத்தி கொலை செய்து, திருநெல்வேலி அருகே டக்கரம்மாள்புரத்தில் புதைத்தனர்.இந்த வழக்கில், துாத்துக்குடி எஸ்.பி., ஜெயகுமார் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர். நேற்று மதியம், துாத்துக்குடி முத்தையாபுரம் அருகே முள்ளக்காடு, கோவளம் கடற்கரையில் துரைமுருகன் கும்பலோடு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., ராஜ்பிரபு, டேவிட்ராஜன் உட்பட போலீசார் தேடிச் சென்றனர்.போலீசாரைக் கண்டதும், துரைமுருகனுடன் இருந்த ஆரோக்கியராஜ், ராஜா தப்பி ஓடினர். டேவிட்ராஜனை துரைமுருகன் அரிவாளால் வெட்டினார்.இதில் இடதுகையில் காயம் ஏற்பட்டது. ராஜ்பிரபு, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரணடைய கூறினார். ஆனால், அவரையும் துரைமுருகன் அரிவாளால் வெட்டினார்.ராஜ்பிரபு, தற்காப்பிற்காக துரைமுருகனை சுட்டார். இதில், அவர் படுகாயம் அடைந்தார்.அவரை, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். காயமடைந்த எஸ்.ஐ., ராஜ்பிரபு, போலீஸ்காரர் டேவிட்ராஜன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறுகையில், ''2011ல் மதுரை ஒத்தக்கடையில் மணிமொழி, 2003ல் துாத்துக்குடியில் ஸ்டாலின், தட்டப்பாறையில் ரஜினிகாந்த்.''திருவண்ணாமலையில் பாலமுருகன் ஆகியோரை கடத்தி கொலை செய்தது, சமீபத்தில் பாவூர்சத்திரம் ஜெகதீஷை கொலை செய்தது என ஏழு கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் துரைமுருகன் மீது உள்ளன,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement