dinamalar telegram
Advertisement

பா.ஜ.,வினர் சாலை மறியல்

Share
கரூர்:தமிழகம் முழுதும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளிலும் கோவில்களை திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில், கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு மிட்டாய் வழங்கினர். அப்போது, டவுன் இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன், பட்டாசு வெடிக்க விடாமலும், மிட்டாய் வழங்குவதை தடுத்ததாகவும் கூறி, பா.ஜ., வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பா.ஜ., தலைவர் சிவசாமி கூறுகையில், ''இன்ஸ்பெக்டரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால், எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement