dinamalar telegram
Advertisement

காட்டுமன்னார்கோவிலில் போலி சமூக ஆர்வலர் கைது

Share
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் டீ கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த போலி சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44; மீன் வியாபாரி. லால்பேட்டை காங்கிருப்பைச் சேர்ந்தவர் நுார்முகமது 35. வெங்கடேசன் வீடு அருகில் வீரநாராயணபெருமாள் கோவில் இடத்தில் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன், கோவில் நிர்வாகத்திடம் சொல்லி இடத்தை காலி செய்து விடுவேன் என நுார்முகமதுவை மிரட்டி பல முறை பணம் பறித்துள்ளார்.நேற்று முன்தினம் மீண்டும், பணம் கேட்டார். இது குறித்து நுார்முகமது, காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வெங்கடேசனை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கடைவீதியில் ஜீப் மெதுவாக வரும் போது குதித்து தப்பி தலைமறைவானார். பின், கடைவீதியில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர்.இன்ஸ்பெக்டர் ஏழுமலை, வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement