dinamalar telegram
Advertisement

கோவில் பூஜைகளில் தலையிட அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை

Share
காரைக்குடி:'கோவில் பூஜைகளில் தலையிட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ, முதல்வருக்கோ அதிகாரமில்லை,'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது:பெரும்பான்மை சமுதாயங்களின் உணர்வுகளை காயப்படுத்துவதே பகுத்தறிவு என்ற மூடநம்பிக்கை தமிழகத்தில் உள்ளது. பிரதமர், ராணுவ அமைச்சர் ராணுவ தளவாடங்களுக்கு பூஜை செய்வது பெருமைக்குரிய விஷயம். வழிபாட்டுத் தலங்கள் திறந்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி.அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில், ஹோமம் நடந்த போது ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி ஹரிப்பிரியா பக்தர்களை விரட்டியுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் வரவேகூடாது. நிதி நிர்வாகம் மட்டுமே அவர்களது பொறுப்பு. கோயில் பூஜைகளில் தலையிட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ, முதல்வருக்கோ அதிகாரம் இல்லை. அர்ச்சகர்களையும், பக்தர்களையும் அதிகாரிகள் மரியாதையாக நடத்துவதில்லை. மக்கள் கொந்தளித்து களத்தில் இறங்கும் நிலையை ஹரிப்பிரியா போன்ற அதிகாரிகள் உருவாக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement