கலாம் கணித்த உயிர் போர் கொரோனா :அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேச்சு
பல்லடம்:''அப்துல் கலாம் தெரிவித்த உயிர் போர் என்பதே 'கொரோனா'தான்,'' என, அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து தெரிவித்தார்.மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், 90வது பிறந்த நாள் விழா, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வனாலயம் வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.விழாவில் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசியதாவது:கனவு இலட்சியம் ஆனால் மட்டுமே வெற்றி பெற முடியும். லட்சியத்துக்காக செயல்பட்டவர் அப்துல் கலாம். இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு, 100 கோடி மரங்கள் என்பது கலாமின் கனவு. அடர் வனங்கள் அதிகரித்து பசுமை பூமி உருவாக வேண்டும்.ஓடினால் தான் நதி என்பதுபோல், தன்னார்வலர்களின் பணி ஓயாமல் நடக்க வேண்டும். மரம் நடும் பணி ஒரு இயக்கமாக மாற வேண்டும்.கொரோனா என்பது ஒரு 'உயிர் போர்', இதை, அப்துல் கலாம் முன்பே தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.பேராசிரியர் துரைசாமி, முருகேசன் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!