dinamalar telegram
Advertisement

வங்காள விரிகுடா வந்தது: பிரிட்டன் போர்க் கப்பல்

Share
புதுடில்லி:கடந்த ஜூலையில் பிரிட்டனின் 'எச்.எம்.எஸ்., ராணி எலிசபெத்' போர்க் கப்பல் தலைமையிலான கப்பற் படை கப்பல்கள் வங்காள விரிகுடாவிற்கு வந்து, இந்திய போர்க்கப்பல்களுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன.மூன்று மாதங்களுக்குப் பின், மீண்டும் அந்த கப்பலும், மேலும் சில பிரிட்டன் போர்க்கப்பல்களும் வங்காள விரிகுடாவில் கூட்டு போர் பயிற்சிக்காக நேற்று வந்தன.இது குறித்து பிரிட்டன் துாதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியதாவது: பிரிட்டனுக்கு இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் இன்றியமையாத நட்பு நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் பிரிட்டன் போர்க் கப்பலின் வருகையால் இரு நாடுகளின் பரஸ்பர ராணுவம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement