dinamalar telegram
Advertisement

19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு; கும்பகோணம் மாநகராட்சியாக தமிழக அரசு அறிவிப்பு

Share
சென்னை : திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


கும்பகோணம் மாநகராட்சியை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியிடப்பட்டது. தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுடன், அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி, 2019 மார்ச் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தன.சட்டசபையில் அறிவித்தபடி, தற்போது, தெங்கம்புதுார், ஆளூர் பேரூராட்சிகள், புத்தேரி, திருப்பதிசாரம், பீமநகரி, தேரேகால் புதுார், மேல சங்கரன்குழி, கனியாகுளம் ஆகிய ஊராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன.


தர்மபுரம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி பகுதியாக இணைக்கப்படுகிறது. இதனடிப்படையில், மாநகராட்சி வார்டு எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை; திருச்சி - முசிறி, லால்குடி; சேலம் - தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.இந்த நகராட்சிகளில் இணைக்க உள்ள ஊராட்சிகள் குறித்து பின்னர் பரிசீலிக்கப்பட உள்ளது.இதேபோல திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருநின்றவூர்; கடலுார் - திட்டக்குடி, வடலுார்; தஞ்சாவூர் - அதிராமபட்டினம்; துாத்துக்குடி - திருச்செந்துார்; கோவை - கருத்தம்பட்டி, காரமடை, கூடலுார், மதுக்கரை; கரூர் - பள்ளப்பட்டி; திருப்பூர் - திருமுருகன்பூண்டி ஆகிய, 12 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


அதே நேரத்தில், இந்த பேரூராட்சிகளின் எல்லைகளில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, ஏழு தேசம் பேரூராட்சிகளையும்; கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் பேரூராட்சிகளை இணைத்து, இரண்டு நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் பேரூராட்சியை, கும்பகோணம் நகராட்சியுடன் இணைத்து, புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டு வரையறை செய்து தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • சம்பத் குமார் -

  1). மாநாகராட்சி புதிதாக ஏற்படுத்துவது எதை குறிக்கிறது.2). ஓன்று அங்கு மக்கள் தொகை அதிகமாகி விட்டது.3). அல்லது மக்களுக்கு வசதிவாய்புகள் அதிகம் உருவாக்கி கொடுப்பது.4). மாநிலத்தையும் மூன்று நான்காக பிரிக்கும்போது அவைகளின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். நன்றி ஐயா, ஹரி ஓம்.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  கும்பகோணம் கொசுத்தொல்லையை ஒழித்தாலே பெரிய புண்ணியம் ..மாநகராட்சி கொஞ்சம் ஓவர் .. முதலில் பாதாள சாக்கடை அமைத்து பிறகு மாநகராட்சியா ஆக்கலாம் ...பெரம்பலூரை மாநகராட்சியாக்கலாமே அவர் சந்தோஷப்படுவார் ..

 • DVRR - Kolkata,இந்தியா

  அதனால் கட்டு மரக்கம்பனிக்கு கிடைக்கப்போவது நிறைய கமிஷன் என்று கொள்ளவேண்டும் அதனால் தான் இந்த முயற்சி என்ன மடியல் அரசே சரிதானே

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வெளிநாடுகளுக்கும் நமது நாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. வெளிநாடுகளில் தரம் உயர்த்துவதற்கு முன்பாகவே அதற்கான வசதிகள் பெருமளவில் செய்து கொடுக்கபட்டிருக்கும். மக்கள் தங்களின் வாழ்க்கைதரன் உயர்வதை கண்டிருப்பார்கள். அதன் பிறகு அறிவிப்புகள் வந்து மேலும் அதிக வசதி வாய்ப்புக்கள் உருவாக்கி தரப்படும். நமது நாட்டில் முதலில் திட்டங்களை அறிவித்து விட்டு பின்னால் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்வார்கள். உயர்த்தப்பட்ட திருச்செந்தூர் நகரில் என்ன வசதி இருக்கிறது என்று தெரியவில்லை. செலக்சன் கிரேடு பஞ்சாயத்து அளவிற்கே கூட அங்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. தூத்துக்குடிக்கு திருச்செந்தூருக்கு இடையே இப்போது செல்லும் பேருந்துகள் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்திலும் குறைந்த பட்சம் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட இரண்டு மடங்கு கூட்டம் சேர்ந்த பின்னரே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதிகள் இல்லை. மாநகராட்சியாக தூத்துகுடியும் அதே நிலை தான். திருச்செந்தூரில் டி டி சி பி அனுமதி பெற்ற ரயில் நிலயத்திளுர்ந்து சில கி மீ தொலைவில் இருக்கும் ஒரே இடம் அன்பு நகர் என்கிறார்கள். அங்கு ட்ரைனேஜ் வசதிகளே இல்லை. செந்தூரில் கூட்ட நெரிசல் இருக்கும் சாலைகள் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை, இருக்கும் சாலைகளோ ஒரு பெருந்திற்கு எதிர் பேருந்து ஒரே நேரத்தில் வரும் அளவில் இல்லை. உணவகங்கள் நிறைய ஈ மொய்த்து கொண்டும் வருடம் முழுவதும் ஆடி மாதம் போலவே இருக்கின்றன இந்த விஷயத்தில். கடற்கரை பேருந்து நிலையம் செல்வதற்கும் திரும்பி வருவதற்குமான சாலைகள் உள்ளூரில் ஆட்டோ செல்லும் வழியாகத்தான் இருக்கிறது. பள்ளத்தெரு, தெற்குத்தெரு வழியாக பேருந்துகள் செல்வதால் மக்கள் அதிகம் நடமாடும் குறுகிய சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். பள்ளத்தெருவில் அதிசயம் என்ன வென்றால் சாலையின் உயரம் வீட்டிலிருந்து ஒரு மீ அதிகம் இருக்கும். வீட்டிற்கு படி ஏறி செல்வதற்கு பதில் இறங்கி தான் செல்லவேண்டும். வசதிகளற்ற கிராமத்தை நகரம் வரையில் தொடர்ந்து உயர்த்தி கொண்டே சென்றிருக்கிறது அரசு எந்த வசதிகளையும் செய்து தராமல். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று எனது தோழியர் பலர் கேட்கின்றனர். அதுதான் சிறப்பு என்று தானே சொல்லவேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் திருச்செந்தூர் பற்றி கொஞ்சம் செய்திகள். நமது மரபு படி விடியல் சூரிய உதயத்தில் ஆரம்பிப்பது வெளிச்சம் உடனேயே. அனால் மேனாட்டு வகையில் கிரிகோரியன் காலெண்டரை பயன்படுத்துகிறது விடியல் அரசு என்று தெரியவில்லை. அதனால் தான் நள்ளிரவு பன்னிரண்டு மணி கணக்கை நாள் துவங்குவதாக கொண்டிருக்கிறது போலும். தரம் உயர்த்தப்பட்ட இந்த ஊர்களெல்லாம் விடியலுக்கு வர கால் பகுதிக்கு மேலாக காத்திருக்கவேண்டும். நள்ளிரவில் இருந்து விடியலுக்கு கால் பங்கு நேரமல்ல மொத்த நேரத்தில்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மாநகராட்சி நகராட்சி ஆகா உயர்த்தப்பட்ட பகுதிகளில் முதல் வேலை வீட்டுவரி குடிநீர் வரி உயர்த்துவதே

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

   வீட்டு வரி, தொழில் வரியை கண்டபடி உயர்த்திவிட்டு , சீராய்வு குழு அமைத்து புரோக்கர்கள் மூலம் கல்லாக்கட்டலாம் ..புதிய மாநகராட்சிகள் மேயர் பதவிக்கு தங்க சங்கிலி [எவன் காசில் ?] தலையிலிருந்து தொடை வரை தொங்கவிடலாம் ...அதுவும் ஊரான் காசில் மஞ்சள் குளிக்கும் வேலை ...மேயர் பதவி முடியும்போது அதுவும் ஆட்டை ..அடுத்தவன் வரும் பொது பழைய சங்கிலி பித்தளை என்று அறிவித்தால் போதுமானது ...கொள்ளைகளுக்காகவே இந்த தரம் உயர்தல்கள் ...மேயர் நகராட்சி தலைவர் பதவிகளும் நேரடி தேர்தலில் நிரப்பப்பட்டால் , நன்று ..இல்லையேல் குதிரை பேரம் கூடுதலாகும் ....

Advertisement