dinamalar telegram
Advertisement

மாணவரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

Share
சிதம்பரம் : சிதம்பரம் அரசு பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவரை, ஆசிரியர் சுப்ரமணியன் காலால் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்லபாண்டி தலைமையில் அதிகாரிகள் விசாரித்தனர்.

இதையடுத்து மாணவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்பியல் ஆசிரியர் சுப்ரமணியன் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி செல்லபாண்டியன், மாணவனை தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அது குறித்த உத்தரவு நகல், சிதம்பரம் கிளை சிறையில் உள்ள ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement