dinamalar telegram
Advertisement

போக்சோ கைதி ஓட்டம்; போலீஸ் சுற்றிவளைப்பு

Share
கோவை:சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பினார். போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து, சிறையில் அடைத்தனர்.கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது சதீஷ் குமார், 21 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சிறுமி திடீரென மாயமானார். கோவை கிழக்கு மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், சிறுமியை சதீஷ் குமார் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிந்தது. கோவை பச்சாபாளையம் பகுதியில், இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து வசித்தனர்.சிறுமியை மீட்ட போலீசார், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். ஆயுதபூஜை கொண்டாட்டத்தின் இடையே, சிறுமியும், இளைஞரும் போலீசாரை ஏமாற்றி தப்பினர். அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் தீவிரமாக தேடினர். இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் சிறுமியுடன் சென்று கொண்டிருந்த சதீஷ் குமாரை போலீசார் பிடித்தனர். சதீஷ் குமார் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement