dinamalar telegram
Advertisement

வண்டிப்பாதையை மறித்து கேட்: அகற்ற உத்தரவு

Share
சென்னை:நீலகிரி மாவட்டம் மேலுார் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதையில், தேயிலை எஸ்டேட் நிர்வாகம் ஏற்படுத்திய தடுப்பை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குன்னுார் தாலுகா, மேலுார் கிராமத்தை சேர்ந்த சுப்பையன் என்பவர் தாக்கல் செய்த மனு:செங்குட்டராயன் மலை கிராமத்தில் இருந்து, மஞ்சகோம்பை - குள்ளகம்பி பிரதான சாலை வரை வண்டிப்பாதை உள்ளது. இந்த வண்டிப்பாதை, தனியார் நிலங்கள் மற்றும் நீலகிரி தேயிலை தோட்டம் வழியாக செல்கிறது.சிறிய அளவில் தேயிலை தோட்டம் வைத்திருப்பவர்கள், மலை கிராமங்களில் வசிப்பவர்கள், பல ஆண்டுகளாக இந்த வண்டிப்பாதையை தான் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், நீலகிரி தேயிலை தோட்ட நிறுவனம், பாதையில், 'கேட்' அமைத்தது. வண்டிப்பாதையில் உள்ள கேட் மற்றும் தடுப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:பல ஆண்டுகளாக இந்த பாதையை, மலைவாழ் மக்கள், சிறு தேயிலை தோட்டம் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கான உரிமையை மறுக்க முடியாது.பழங்குடியின மக்களுக்கு தண்ணீர், மருத்துவ உதவி என அடிப்படை வசதிகள் தேவைப்படும். அதை, அரசு வழங்க வேண்டிய கடமை உள்ளது. பாதையில் தடுப்பு, கேட் அமைத்தால், மலை கிராமங்களை அணுக முடியாது.பழங்குடியினருக்கான வண்டிப்பாதை பயன்பாட்டை தடுப்பது, வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. தேயிலை தோட்ட நிர்வாகத்தின் செயல் சட்டப்படி குற்றம். கிராமத்தினருக்கான பாதையை, தேயிலை தோட்ட நிறுவனம் தடுக்க முடியது.எனவே, வண்டிப்பாதையில் உள்ள தடுப்பு, கேட், ஒரு வாரத்தில் அகற்றப்பட வேண்டும். பழங்குடியின மக்கள், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். நிறுவனம் கட்டுப்பாடு ஏதும் விதித்தால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement