dinamalar telegram
Advertisement

ரூ. 1.34 கோடி போலி செக் : மேலும் இருவர் கைது

Share
கோவை:கோவையில் போலி செக் பயன்படுத்தி, 1.34 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட முயன்ற வழக்கில் மேலும், இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை, திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு, இரு நாட்களுக்கு முன் வந்த இருவர் டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒருநிறுவனத்தின் பெயரில், 1.34 கோடி ரூபாய்க்கான செக்கை செலுத்தினர். வங்கி கிளை மேலாளர் பிரசாத் ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது அதுபோன்ற எந்த 'செக்'கையும் கொடுக்கவில்லை என, அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். வங்கியில் போலி செக் கொடுத்த செந்தில்குமார்,45, ஸ்ரீ ஹரிகுமார்,45, சுதீஷ், 27 ஆகிய மூவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய, நீலகிரி மாவட்டம் குன்னுாரை சேர்ந்த பார்த்திபன், 37 மற்றும் சூலுாரை சேர்ந்த ராஜ் பரத் கிருஷ்ணன், 23 ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement