30 சவரன் நகை திருட்டு:மர்ம நபர்களுக்கு வலை
கோவை:கோவை, சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கவுரி, 73. கடந்த இரு மாதங்களுக்கு முன் வரலட்சுமி விரத பூஜை நடத்தினார். இதையடுத்து தனது, 30 சவரன் நகைகளை வீட்டு பீரோவில் பத்திரப்படுத்தினார்.சமீபத்தில் பீரோவை திறந்து பார்த்தபோது, 30 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. இதையடுத்து கவுரி குனியமுத்துார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!