dinamalar telegram
Advertisement

ஆடை ஏற்றுமதி எழுச்சி : 51.6 சதவீதம் உயர்வு

Share
திருப்பூர்:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 54 ஆயிரத்து 225 கோடி ரூபாயை எட்டியுள்ளது.கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், ஏப்., முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில், 35 ஆயிரத்து 767 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது. இந்த வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 54,225 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், சரிவில் இருந்து மீண்டெழுந்துவிட்டது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் செப்., வரையிலான அரையாண்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 51.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் பஞ்சு, சாயம் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆயத்த ஆடைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயித்து பெற வேண்டியது அவசியம். இவ்வாறு, கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement