dinamalar telegram
Advertisement

பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது

Share
கோவை:பஸ்சில், பணத்தை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.கோவை, வெள்ளலுாரை சேர்ந்தவர் கற்பகம், 23. இவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக வீட்டில் இருந்து, ரூ.25 ஆயிரத்துடன் நேற்று பஸ்சில், கற்பகம் பயணித்தார். பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து இறங்கி பார்த்தபோது, பணம் திருடுபோனது தெரிந்தது.அதிர்ச்சியடைந்தவர், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசாரிடம் தெரிவித்தார். சுதாரித்த போலீசார், அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றிய ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த பார்வதி, 33 என்பதும், பஸ்சில் கூட்டத்தை பயன்படுத்தி இளம்பெண்ணின் பணத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை மீட்ட போலீசார், அப்பெண்ணை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement