dinamalar telegram
Advertisement

கொரோனா தொற்று: 1,245 பேர் பாதிப்பு

Share
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று, 1,245 பேர் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் உள்ள 304 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.35 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 167 பேர்; கோவையில் 139 பேர்; செங்கல்பட்டில் 92 பேர்; ஈரோட்டில் 91 பேர்; திருப்பூரில் 71 பேர் என 1,245 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.இதில், 12 வயதுக்கு உட்பட்ட 86 சிறார்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட, 183 முதியோர்களுக்கும் தொற்று உறுதியானது. இதுவரை, ஒரு லட்சத்து, 941 சிறார்களும்; 3 லட்சத்து, 88 ஆயிரத்து, 71 முதியோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை, 4.91 கோடி மாதிரிகள் பரிசோதித்ததில், 26 லட்சத்து, 84 ஆயிரத்து, 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை முடிந்து நேற்று, 1,442 பேர் உட்பட, 26 லட்சத்து, 33 ஆயிரத்து, 534 பேர் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில் 1,830; கோவையில் 1,587; செங்கல்பட்டில் 1,112; ஈரோட்டில் 921 பேர் என, 15 ஆயிரத்து, 238 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் நேற்று, 16 பேர் உட்பட 35 ஆயிரத்து 869 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement