dinamalar telegram
Advertisement

அங்கன்வாடி திறப்பு அறிவிப்பு; சத்துணவு வழங்குவதில் சிக்கல்

Share
திருப்பூர்:நவ., 1ல் அங்கன்வாடி மையம் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் நிரப்பாததால், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.அங்கன்வாடிகளில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் மூன்று ஆண்டுகளாக முழுமையாக நிரப்பபடாமல் காலியாக உள்ளன. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாக்யம் கூறியதாவது:மாநிலம் முழுதும், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளது; ஒரு லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 85 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பணியில் உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடம் காலியாக உள்ளது. மூன்று ஆண்டாக ஆட்கள் தேர்வு நடக்கவில்லை.நவ., 1 முதல் அங்கன்வாடி மையத்தை திறந்து, குழந்தைகளை பள்ளிக்கு வர செய்து, சத்துணவு வழங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு முன், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாலுகா, மாவட்ட அளவிலான பணியிட மாற்றம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement