dinamalar telegram
Advertisement

அப்துல்கலாம் பிறந்தநாள்: கவர்னர் ரவி மரியாதை

Share
சென்னை:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 90வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள அப்துல்கலாம் சிலைக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.'உன்னதமான எண்ணங்கள், தேசபக்தி, வாழ்க்கையில் உயர்வான ஆசையை வளர்ப்பதன் வாயிலாக, இளைய தலைமுறையினர், கலாமின் பணியை முன்னெடுத்து செல்ல வேண்டும்' என்று கவர்னர் கேட்டுக்கெண்டார்.இந்நிகழ்ச்சியில் கவர்னரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.உறுதியேற்போம்!முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன் படிப்பாலும், விடா முயற்சியாலும், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்று, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் அப்துல்கலாம். இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க, அவரது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement