dinamalar telegram
Advertisement

நகர ஊரமைப்புத்துறை பணியிடங்கள் காலி! முக்கிய பதவிகளை நிரப்ப பேரம்

Share
நகர ஊரமைப்புத்துறையில் முக்கியப் பதவிகளுக்கு பணியிடம் ஒதுக்குவதற்கு, பெருமளவில் பேரம் நடப்பதால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் பல்வேறு உள்ளூர் திட்டக்குழுமங்களும், நகர ஊரமைப்புத்துறை அலுவலகங்களும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன.


கடந்த ஆட்சியின்போது, இவற்றை ஒருங்கிணைத்து, 36 மாவட்டங்களிலும் மாவட்ட நகர ஊரமைப்புத்துறை அலுவலகம் துவக்கப்பட்டது. இதனால் அலுவலர்களின் அதிகாரம் அதிகமானது; அவர்களின் வருவாயும் அதிகரித்தது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்தப் பணியிடங்களை ஒதுக்குவதற்கு பெரிய அளவில் பேரம் நடந்து, அதிகப் பணம் கொடுத்தவர்களுக்கு வருவாயுள்ள மாவட்டங்களில் பணியிடம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆட்சி மாறிய பின்பும், இவர்களில் பெரும்பாலானோர் மாற்றப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தவர்களுக்கும் கூட, தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தர்மபுரியில் நகர ஊரமைப்புத்துறை உதவி இயக்குனராக பணி புரிந்த யோகராஜா மீது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 10 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜூலை 5ல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். ஆனால் அடுத்த ஒரே மாதத்தில், அதாவது ஆக.,6ல், அவருக்கு துணை இயக்குநராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை, பதவி உயர்வு வழங்குவதற்கு எந்தத் தடையுமில்லை என்பதால் பதவி உயர்வு தரப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, கடந்த ஆகஸ்ட்டில் பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆறு பேருக்கும் இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை. பசையான பணியிடங்களுக்கு பேரம் நடப்பதால்தான் இவ்வளவு தாமதம் என்று தகவல் பரவி வருகிறது. கோவையில் இணை இயக்குநர் பணியிடத்துக்கு, இரண்டு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.பல மாவட்டங்களிலும் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றும் அலுவலர்கள் வெகுதுாரத்துக்கு துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாகவும், துறைக்குள்ளேயே குமுறல்கள் வெடித்துள்ளன. முதல்வர் நினைத்தால், இந்த குமுறலுக்கும், குளறுபடிக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்-நமது சிறப்பு நிருபர்-.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement