ரயில்வே நில மேம்பாடு ஆணையத்தினர் ஆய்வு
குன்னுார்:டில்லி ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், ஊட்டி மலை ரயிலில் ஆய்வு செய்தனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே, நேற்று சிறப்பு மலை ரயிலில் இயக்கப்பட்டது. டில்லி ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய துணை தலைவர் வேதுபிரகாஷ் துட்ஜா தலைமையில், 20 பேர் அடங்கிய குழுவினர் பயணம் செய்தனர்.மலை ரயில் பாதையில், ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னுார், வெலிங்டன், அருவங்காடு ரயில் நிலையங்களை ஆய்வு செய்தனர். அதில், ரயில்வே நிலங்களின் அளவீடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களையும் பார்வையிட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!