dinamalar telegram
Advertisement

சார் - பதிவாளர் பதவி 116 பேருக்கு ரத்தாகிறது?

Share
சென்னை:பதிவுத் துறையில், 116 உதவியாளர்களுக்கு சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளதை, நீதிமன்றம் உறுதி செய்ததால், ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பல ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி தவித்தனர்.இவர்களுக்கு, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கும் பணிகள், 2019ல் துவங்கின. அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இது நிலுவையில் இருந்தபோது, நிர்வாக அவசரம் காரணமாக மட்டும், சிலருக்கு பதவி உயர்வு வழங்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்நிலையில், 2021 பிப்., 26ல், 116 உதவியாளர்களுக்கு, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களில், 65 பேருக்கு அதே நாளில், முதல் நிலை சார் - பதிவாளர்களாக அடுத்த பதவி உயர்வும் தரப்பட்டது.இது, பதிவுத் துறையில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகுதி உள்ள பலர் ஓரம் கட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சமுதாய பிரிவினருக்கு சலுகை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிலர், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நிர்வாக அவசரத்துக்காக சிலருக்கு மட்டும், பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கினோம்.'இதை தவறாக பயன்படுத்தி, 116 பேருக்கு பதவி உயர்வு வழங்க, பதிவுத் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, 116 பேரின் பதவி உயர்வை திரும்ப பெறுவது குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement