dinamalar telegram
Advertisement

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது

Share
சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்' என தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தீபாவளிக்கு, இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின், நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை வரவேற்கிறோம்.அதே நேரத்தில், தமிழகத்தில் சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்; மக்கள் முழுதுமாக பண்டிகையை கொண்டாட ஆவண செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement