dinamalar telegram
Advertisement

வி.சி., நிர்வாகி மீது போலீசில் பா.ஜ., புகார்

Share
சென்னை;'விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசுக்கு, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அனுப்பப்படும் பணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, பா.ஜ., வழக்கறிஞர் அணியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:காலத்தின் குரல் என்ற, 'டிவி சேனல்' நிகழ்ச்சியில் பேசிய, வி.சி., நிர்வாகி வன்னியரசு, பிரதமர் மோடி குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில், அவதுாறாக பேசியுள்ளார். இதன் வாயிலாக, பிரிவினை வாதத்தை துாண்டிவிட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார்.ஒரு குறிப்பிட்ட மதத்தினரிடம், விஷமத்தனமான கருத்துகளை விதைத்து வருகிறார். அவர்களிடம் பிரிவினை வாதம் பேசி, அந்த மதத்தினரிடம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.வன்னியரசு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் அனுப்பப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement