dinamalar telegram
Advertisement

கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது

Share
சென்னை;''கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது,'' என மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து, ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:கோவில்களில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கோவில்களில் சூழ்நிலைக்கு ஏற்ப ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது குறித்து, கோவில் நிர்வாகங்கள் முடிவெடுக்கும். ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கோவில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது.கோவில் வருவாயில் வழங்கும் சம்பளம், ஹிந்துக்களுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லுாரிகளில், ஹிந்துக்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.இந்நிகழ்ச்சியில், கோவில் இணை கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement