dinamalar telegram
Advertisement

போலீஸ் கமிஷனரிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

Share
சென்னை;தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.நெஞ்சுவலி காரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது இதயத்தில் இரண்டு இடங்களில் அடைப்பு இருந்துள்ளது. டாக்டர்கள், 'ஆஞ்சியோ' சிகிச்சை செய்து, அந்த அடைப்பை நீக்கி உள்ளனர்.சங்கர் ஜிவாலிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டார். அதேபோல, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் உடல் நலக்குறைவால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமும் முதல்வர் நலம் விசாரித்தார். பன்னீர்செல்வம் இன்று மாலை, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement