பெரியதச்சூர் கிராம மக்கள் மனு
விழுப்புரம் : தனி கிராம ஊராட்சியாக அறிவிக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:எங்கள் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இங்குள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, எங்கள் கிராம ஊராட்சித் தலைவர் பதவி பட்டியல் இன சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், பெரும்பான்மை சமூகத்தினர் திட்டமிட்டு வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்துள்ளனர்.தனி பிரிவிற்கு ஒதுக்கியும் எங்களால் அதிகாரத்திற்கு வரமுடியவில்லை. எனவே, எங்கள் பகுதியை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!