dinamalar telegram
Advertisement

மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்ப நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை

Share
மும்பை : மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்கள், கணக்கில் காட்டாமல் 184 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில், சமீபத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அந்த இரண்டு குழுமங்களும் 184 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் வருமானம் ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், கணக்கில் காட்டப்படாத 2.13 கோடி ரூபாய் பணமும், 4.32 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    இப்படி மிரட்டி எவ்வளவு பேரை பணிய வைக்க முடியும்

  • sankaseshan - mumbai,இந்தியா

    தேச துரோக மதமாற்றம் செய்யும் கூட்டத்துக்கு துட்டு அடிக்க முடியவில்லை மோடிஅரசு ஆப்பு வைத்து விட்டது வெளிநாட்டு நன்கொடை முடக்க பட்டு விட்டது அதுதான் கதறல்

  • GANESUN - Delhi,இந்தியா

    புதுசு புதுசா கூலிபான்கள் வந்து சம்பந்தமில்லாத எவ்வளவு கூவினாலும் (7 1/2 வருஷமா கூவறதுதான்) ஒரு ,.... முடியாது.

  • Sivagiri - chennai,இந்தியா

    சே சே - ரொம்ப மோசம் இந்த ஐ.டி / இ.டி - இவிங்களுக்கு தமிழ்நாடு-ன்னு ஒன்னு இருக்கிறதே தெரியாது போல . . . இங்க தனித்தமிழ்நாடு-ன்னு கோஷத்தை கேட்டதும் ஒதுங்கி போயிடறாங்க போல . . .

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கேள்வி கேட்ட போது, அணையில் சிறுநீர் கழித்து தண்ணீர் பெறலாம் என்று சொன்ன சின்ன புத்தி கொண்டவன். இப்போது அதை குடித்தாலும் பணம் போன தாகம் இவனுக்கு அடங்காது போல

Advertisement