சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்
விழுப்புரம் : விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையோரம் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரம், காணை கிராம பகுதிக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் அங்கு தேங்கி, அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அவ்வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், அங்குள்ள சாலைக்கு அருகே வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!