கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டார். இதில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட வர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை; சிகிச்சை பெற்று வருபவர்கள்; இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்டத்தில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!