மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் பாசனத்திற்கு திறப்பு
தேவதானப்பட்டி : மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முதல்போகம் பாசனத்திற்கு நேற்று திறக்கப்பட்டது.
இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 8124 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மஞ்சளாறு அணையை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்.தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உளளது. நேற்று அணையின் உயரம் 55 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 60 கனஅடியாகவும் இருந்தது.தண்ணீர் திறப்பில் தேனி கலெக்டர் முரளீதரன், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், சப்-கலெக்டர் ரிஷப், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மதகினை திறந்து வைத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 3386 ஏக்கர் பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 60 கனஅடிவீதமும், 1873 ஏக்கர் புதிய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 40 கனஅடி வீதமும் 2022 மார்ச் 15 (152 நாட்கள்) வரை வழங்கப்படும். மின்துறையில் கருணை அடிப்படையில் தேனி, ராமநாதபுரம் சேர்ந்த 9 பேருக்கு பணி உத்தரவை அமைச்சர் வழங்கினார்.
சோத்துப்பாறை அணை திறப்பு சோத்துப்பாறை அணை மொத்த உயரம் 126.28 அடி, நிரம்பி 3 கனஅடி மறுகால் பாய்ந்தது. அணை நீரினால் பெரியகுளம் தாலுகாவில் பழைய,புதிய ஆயக்கட்டில் மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நேற்று முதல் 30 கனஅடி வீதம் 2022 மார்ச் 15 (152 நாட்கள்) வழங்கப்படுகிறது. தென்கரை விவசாயிகள் சங்க தலைவர் வீரகேசவன், செயலாளர் பாபு, பொருளாளர் குமரன் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!