dinamalar telegram
Advertisement

மேகமலை புலிகள் காப்பகத்தில் விரிவான ஆய்வுக்கு திட்டம்

Share
கம்பம் : ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பிரச்னைகள் களைய வனத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் காப்பகம் 2020 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.புலிகள் காப்பகமாக மாறியபின்பும் உரிய அதிகாரிகள் நியமனம் இன்றி காப்பக பகுதிகள் வரையறுக்காமல் உள்ளது.வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்திற்கு இயக்குனர் நியமித்தனர். சரக அளவில் தேவையான பணியாளர்கள், ஆயுதங்கள், கருவிகள் வழங்க வில்லை. இரு துணை இயக்குனர்கள் நியமிக்க உள்ளனர்.

புலிகள் காப்பகம் முழுமையாக செயல்பட, காப்பக பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.பட்டா காடுகளின் உரிமையாளர்களிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கோர் மண்டலம் (வனஉயிரினங்கள் மட்டுமே வாழும் பகுதி), பவ்வர் மண்டலம் (மனிதனும், வனஉயிரினங்களும் சேர்ந்து வாழும் பகுதி) கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement