dinamalar telegram
Advertisement

நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் தமிழகத்தில் அமைக்கப்படும்; விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்

Share
Tamil News

சென்னை : ''தமிழகத்தில், நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும்,'' என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.


தமிழக தடகள சங்கத்தின் சார்பில், 93வது மாநில அளவிலான தடகள போட்டிகளின் துவக்க விழா, சென்னை, நேரு விளையாட்டரங்கில், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழர்கள் உடல் நலத்தை பேண வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


தேசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கான செலவை, தமிழக அரசே ஏற்கும்.அந்த வகையில், பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, 2 கோடி ரூபாய் அளித்து, முதல்வர் உற்சாகப்படுத்தி உள்ளார். வாள் வீச்சு வீராங்கணை பவானிதேவி, பிரான்சில் பயிற்சி பெற உதவி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயார்படுத்தும் வகையில், ஒலிம்பிக் அகாடமிகள் துவங்கப்படும். வீரர், வீராங்கணைகள் தங்கி பயிற்சி பெறும் வகையில், ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன், தமிழக தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • DVRR - Kolkata,இந்தியா

    சும்மா சும்மா விளையாட்டு போக்கிலே பேசணும்கிறது என்பது தான் திருட்டு திராவிட கட்சியின் அமைச்சர்களின் கொள்கை என்று இதனால் நிரூபணமாகின்றது??ஒரு சேகர் பாபர் குமாயூன் இல்லே அந்த கட்சியில் எல்லோரும் அதான் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு??என்ன பொய்யாநாதன் சரிதானே

  • vbs manian - hyderabad,இந்தியா

    இந்த அகாடெமியி ல் l சேர திறமை i மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நீதி ஒதுக்கீடு எல்லாம் நுழைந்தால் பித்தளை பதக்கம் கூட கிடைக்காது.

  • ராஜா -

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    கஜானாவை காலி பண்ண எல்லா ஐடியாவும் பண்ணுவானுங்க

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    ஆமா - தமிழகத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளதாமே ? அதன் நிலை.....

Advertisement