dinamalar telegram
Advertisement

நாட்டின் சிமென்ட் உற்பத்தி 12 சதவீதம் அதிகரிக்கும்

Share

புதுடில்லி : நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய அமைப்பான 'இக்ரா' தெரிவித்துள்ளது.


இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் சிமென்ட் உற்பத்தி, கடந்த 5 மாதங்களில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உற்பத்தி 12 சதவீதம் வரை உயர்ந்து, 332 மில்லியன் டன் ஆக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிமென்ட் உற்பத்தி உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், தேவை அதிகரித்து வருவதாகும். விலையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வருவாயை பொறுத்தவரை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 12 நிறுவனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில் 13 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Senthilkumar Narayanan - Coimbatore,இந்தியா

    மக்கள் மிகப்பெரிய முட்டாள்கள். தேவை அதிகரித்தால் உற்பத்தியை கூட்டி விலையும் குறைக்க வேண்டும். மாறாக பணவெறி பிடித்தவர்கள் உற்பத்தியை கூட்டி விலையையும் ஏற்றி 200% லாபம் பார்க்கிரார்கள் காரணம் மக்கள் மட்டுமே எதிர்காலத்தில் விலை ஏறுகிதே என்று மக்கள் கடன் பெற்று வீடுகட்ட நினைக்கிறார்கள் மாறாகா விலை ஏறினால் அப்பொருளை வாங்காமல் மதிப்பிழக்கச்செய்யுங்கள். இது கட்டு மான பொருளுக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும். நகை போன்றவை.

  • Vittalanand -

    உற்பத்தி எங்கே உயர்ந்தது ? விலை தான் உயர்ந்து.

  • duruvasar - indraprastham,இந்தியா

    மாறன் காட்டுல மழலன்னு சொல்லுங்க. மாறனனுக்கு தெரியாத திட்டமிடலா. இரூக்கும் இடத்துக்கே எப்படி லயனை இழுக்கனும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. சமீபத்தில் தீடிரென தமிழ்நாட்டில் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் விலை ஏற்றினார்களே , எங்கேயாவது செய்தி வந்ததா

  • chennai sivakumar - chennai,இந்தியா

    Prices have already shot up in TN and further it will go up and final tally will be 1000 rupees per bag

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    உற்ப்பத்தியை இன்னும் சிறிது குறைத்தால் தமிழகத்தில் மூட்டை ஒன்றுக்கு 1000 என்ற அளவில் பற்றாக்குறையை காரணம் காட்டி விற்று சந்தோசப்படுவார்கள்...

Advertisement