மழை வந்தாலே படையெடுக்கும் விஷ பூச்சிகள் அவதியில் சாத்தூர் வசந்தம் கே.ஏ.பி.நகர் மக்கள்
சாத்துார் : மழை வந்தாலே படையெடுக்கும் விஷ பூச்சிகள், சகதியாகும் ரோடு, குடிநீருக்காக அல்லல், தெருவிளக்கின்றி இருள் என சாத்துார் வசந்தம் கே.ஏ.பி.நகர் மக்கள் அவதிகுள்ளாகின்றனர்.
மேட்டமலை ஊராட்சிக்குட்பட்ட இந்நகர் உருவாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரோடு, சாக்கடை, தெரு விளக்கு வசதியின்றி மக்கள் மழைக்காலத்தில் வீட்டைவிட்டு வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.மின்கம்பங்கள் இருந்தும் தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
சிவகாசி வெற்றிலையூரணி கிராமத்தின் குறுக்கு பாதையாக இருப்பதால் இரவு பகல் என 24 மணி நேரமும் இப்பகுதியில் வாகன போக்குவரத்து உள்ளது. இருந்தும் முறையான ரோடு வசதி இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வண்டி ஓட்ட முடியாமல் ரோட்டிலேயே நிறுத்தி விட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!