dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: கம்யூ., கொள்கை என்ன தெரியுமா?

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

க.அருண், முக்கூடல், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஏர் இந்தியா' நிறுவனம், 'டாடா இந்தியா' நிறுவனமாகி விட்டது.

'பொதுத்துறைகளை, பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கவே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார், பிரதமர் மோடி. நஷ்டத்தில் இயங்குவதை, டாடா வாங்குவது ஏன்; அவரால் லாபம் பெற முடியும் என்றால் அரசால் முடியாதா?' என அங்கலாய்த்து இருக்கிறார், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்.நம் நாட்டில் நல்ல நிலையில் இயங்கிய தொழிற்சாலைக்குள், கம்யூ., நுழைந்து, தொழிற்சங்கம் அமைத்து, பிரச்னைகளை உருவாக்கும். விரைவில், அந்தநிறுவனத்தை 'ஊத்தி மூட' வைத்து, தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி, கம்யூ., புளகாங்கிதம் அடையும்.

கம்யூ., புகுந்த எந்த இடமாவது உருப்பட்டு இருக்கிறதா?இதுவரை ஏதாவது ஒரு தொழிற்சாலையை, கம்யூனிஸ்ட்கள் தங்கள் முயற்சியால் உருவாக்கியதாக சுட்டிக் காட்ட முடியுமா அருணன்? கம்யூனிஸ்ட்கள் உருவாக்கிய தொழிற்சாலைகளின் பட்டியல் தாருங்கள் பார்க்கலாம்... அரசாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும், எந்த நிறுவனத்தையும் லாபம் வரவில்லை என்றாலும், நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் தான் தொடர்ந்து நடத்த முடியும்.பல்வேறு முயற்சிகளுக்கு பின்னும், தொடர்ந்து நஷ்டமே வந்து கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தை மூடுவரே தவிர, மேலும் நஷ்டத்தை அனுபவிக்க துணிய மாட்டார்கள்

.'தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதே இந்த அரசின் கொள்கை. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த, 'ஏர் இந்தியா' நிறுவனத்தை, வெற்றிகரமாக தனியார் மயமாக்கி உள்ளோம். இது போல தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்' என தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறார் நம் பிரதமர் மோடி.கம்யூனிஸ்ட்களின் தொழிற்சங்க கொள்கை என்ன தெரியுமா?நுாறு நபர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், 200 பேரை பணியமர்த்த வைத்து, அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து, அந்த தொழிற்சாலைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி மூடச் செய்வது தான், கம்யூ., கொள்கை!குரங்கிற்கு கூடு கட்டத் தெரியாது; ஆனால், துாக்கணாங்குருவி கூட்டை பிய்த்து எறியும். அது போல, கம்யூனிஸ்ட்களுக்கு எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவோ, நிர்வகிக்கவோ தெரியாது... ஆனால், நல்ல முறையில் இயங்கும் நிறுவனத்தை இழுத்து மூட வைக்க மட்டும் நன்றாக தெரியும்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (71)

 • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

  அப்போ நீங்க எட்டு மணிநேர வேலை திட்டத்தின் எதிரியா ?

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  இந்த கம்யூனிஸ்ட்கள் கொள்கை எந்த எந்த கட்சி தேர்தலுக்கு தேர்தலில் எவ்வளவு பேட்டி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்தவாறு பச்சோந்தி கலராக மாறுவது தான்.

 • BALU - HOSUR,இந்தியா

  கம்யூனிஸ்ட்களுக்கு சுயபுத்தி கிடையாது. அதன் தலைமையகமான சீனாவிலிருந்து வரும் அஜென்டாவை செயல்படுத்தி போராடுவதைத் தவிர வேறெந்த அறிவும் சிறிதும் கிடையாது.கம்யூனிஸ ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் யாரும் சிறு தொழிற்சாலைக் கூடத் திறக்க மாட்டார்கள்.கம்யூனிஸத்துக்கு ஓட்டுபோட்ட மக்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அண்டை மாநிலங்களில் போய் பஞ்சம் பிழைத்து வயிறு வளர்ப்பார்கள்.தங்களது மக்களின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கும் அறிவற்றவர்களே கம்யூனிஸத்திற்கு வாக்களிப்பார்கள்.அதன் தலைவர்களோ அந்த வாக்குகளை விற்று வயிறு வளர்ப்பார்கள்.திண்ணை தூங்கிகள்.

 • இந்தியன் -

  ஒரு கம்யூனிஸ வாதி சொன்னது....நாங்க இல்ல அப்டின்னா...முதலாளி கிடையாது அப்டின்னு....ok.....அப்படின்னா.....உங்க கடை வேலையாட்களை...partner... அதான் யா.....சக முதலாளியாக பாவிக்கலாம் தான....சொன்னதற்கு...நீங்க கிளம்புங்க....அப்படின்னு சொன்னாங்க......நமக்கு வந்த தக்காளி சட்டினி....அவனுகளுக்கு வந்த மட்டும் ரத்தம்

 • Harsha Jack - Tamilnadu,இந்தியா

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Advertisement