dinamalar telegram
Advertisement

சரஸ்வதி ஸ்லோகம் போட்டி: வெற்றியாளர் தேர்வு துவக்கம்

Share
கோவை:'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட சரஸ்வதி ஸ்லோகம், வித்யாரம்பம் போட்டிகளில் சிறந்த வீடியோக்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. சிறந்த ஆடை அலங்காரம், நல்ல குரல் வளத்துடன் பிழையின்றி சரஸ்வதி ஸ்லோகம் சொல்லும் பள்ளிக் குழந்தைகளை வீடியோ எடுத்து அனுப்பும் இந்த போட்டியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல விஜயதசமியை முன்னிட்டு சின்னஞ்சிறு மழலையரின் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி வீடியோக்களை அனுப்புமாறு பெற்றோர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்த இரு போட்டிகளுக்கும் வந்துள்ள வீடியோக்களை தேர்வுக் குழுவினர் பார்வையிட துவங்கியுள்ளனர். பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் விபரம் அக். 24ல் வெளியாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement