dinamalar telegram
Advertisement

மும்பை போதைப் பொருள் வழக்கு: அதிகாரிக்கு கூடுதல் பாதுகாப்பு

Share
மும்பை,-மும்பையில் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட 20 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சமீபத்தில் சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடே தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். போதை பொருட்கள் வைத்திருந்த நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட 20 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், மும்பை போலீசார் தன்னை பின் தொடர்வதாக சமீர் குற்றம் சாட்டினார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அதிகாரி சமீருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்புடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் கூடுதலாக பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஷாரூக்குக்கும் ஆர்யனுக்கும் கட்டம் சரியில்லை - கைப்பிள்ளை ஸ்டைல்

  • Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அப்பனுக்கு ஏழரை சனி. மகனுக்கு அஷ்டம சனி

  • Charles - Burnaby,கனடா

    சாருக்ஹ் தமிழ் நாட்டில் போதை பொருளே கிடையாதப்பா. ஏதாவது பெரியமனுஷனுடைய பிள்ளைகள் மாட்டியிருக்கிறார்களா சென்னையில் பேசாம சென்னைக்கு குடும்பத்தோட வந்திடப்பா உன்கிட்டேதான் சென்னை எக்ஸ்பிரஸ் இருக்கிறதே??

  • Sudhakar - Singapore,சிங்கப்பூர்

    முதலில் மது, போதை மருந்துகளை உபயோகிக்கும் நடிகர் நடிகைகளை மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும், மற்றும் படங்கள் / டிவி தொடர்களில் நடிக்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். பிறகு தானாகவே அடங்கி விடுவார்கள், மது பாட்டில்களோடு டீ. நகரில் மாட்டிய நடிகை இன்னும் பக்தி மாரியம்மாவாக நடிக்கிறார், இன்னொரு வடா இந்திய நடிகை போதை பொருட்களோடு மாட்டினார். இன்னும் மக்கள் ஏன் அவர்களை தூக்கி எரியவில்லை ? அந்த கேடுகெட்டவர்களின் படங்களை / சீரியல்களை பார்க்க மாட்டோம் என்று ஒரு சின்ன எதிர்ப்பு வரட்டும், பிறகு தெரியும் சேதி, மக்கள் கையில்தான் இருக்கு. மாற்றியோசி

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    முதலில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை தண்டிக்கணும்.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      காசு, துட்டு, மணி, மணி. இந்த பெரும்புள்ளிகளின் எலும்புத் துண்டுகளுக்கு அடிமையாகிய பாதுகாப்பு அதிகாரிகள் சிலர்.

Advertisement