dinamalar telegram
Advertisement

இரண்டாம் தாரத்திற்கு ஜீவனாம்சம் கிடையாது

Share
மும்பை :'ஊரறிய இரண்டாம் தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாலும் சட்டப்படி mசெல்லாத திருமணத்துக்கு சம்பந்தப்பட அந்த பெண் ஜீவனாம்சம் கோர உரிமையில்லை' என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரகலா என்பவர் 2003ல் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பிரிந்துள்ளார்.அவரின் ஜீவனாம்ச கோரிக்கையை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து சந்திரகலா மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.தீர்ப்பின் விபரம்:

சந்திரகலாவின் கணவர் 1990ல் ஒருவரை மணந்து பின் பிரிந்துள்ளார். இந்நிலையில் 2003ல் சந்திரகலாவை முறைப்படி அவர் திருமணம் செய்துள்ளார்.ஆனால் அவருக்கு முதல் திருமணம் தொடர்பான விவாகரத்து 2009ல் தான் கிடைத்துள்ளது. அதற்கு முன் சந்திரகலாவை திருமணம் செய்ததால் அது சட்டப்படி செல்லாது எனக் கூறி ஜீவனாம்சம் தர மறுத்துள்ளார்.

மேலும் விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை என்பது தெரிந்தே இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட சந்திரகலா சம்மதித்துள்ளார்.அந்த திருமணம் ஊரறிய நடந்திருந்தாலும் சட்டப்படி செல்லாது என்பதால் சந்திரகலாவின் ஜீவனாம்ச கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement