dinamalar telegram
Advertisement

45 தெரு நாய்கள் இறப்பு

Share
சென்னை:சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 45 தெரு நாய்கள் இறந்தது தொடர்பாக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் ஹரிஷ்; விலங்குகள் நல ஆர்வலர். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சட்ட விரோதமாக 186 தெரு நாய்கள் அடைத்து வைத்தனர். இவற்றில் போதிய பராமரிப்பு இன்றி 45 நாய்கள் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பாக ஐ.ஐ.டி. பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement