dinamalar telegram
Advertisement

தலிபான் தலைவர் ஹிபத்துல்லா பலி

Share
காபூல்:தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் ௨௦௧௬ல் அமெரிக்க படையினரால் கொல்லப் பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப் பேற்றார்.அவர் எப்படியிருப்பார் எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாக வில்லை.

ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை தலிபான்கள் மறுத்தனர்.இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றினர். இதையடுத்து ஹிபத்துல்லா வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் கூறுகையில் ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement